உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை என காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தமிழ்நாட்டு தலைவர் கே.எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பேரறிவாளன் விடுதலை தொடர்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி விடுத்துள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொன்ற கொலையாளிகள் ஏழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என கூறி தண்டனை கொடுத்தது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம். (2/2)
– தலைவர் திரு கே.எஸ். அழகிரி pic.twitter.com/ADO6MZ4HhA— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) May 18, 2022
அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களை சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை.
அதே நேரத்தில் குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாக கூற விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.