வீட்டை எழுதி தராத தந்தை மகன் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அவினாசி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் மூத்த மகன் நாகராஜ் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக இவர் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டை சோதனை செய்தபோது கருப்பசாமி அங்குள்ள செப்டிக் டேங்கில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து அவரின் உடலை மீட்டு காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் நாகராஜை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் தனக்கும் தந்தைக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்படும் எனவும் தற்போது குடியிருந்த வீட்டை எனது பெயருக்கு எழுதி கேட்டபோது அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்
இதனால், தகராறு ஏற்பட்டதாகவும் அதில் ஆத்திரமடைந்த நான் கட்டையால் அவரை கொலை செய்தன் என ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.