'சம்மர் ட்ரீட்' – வெளியாகிறது 'ஜூராஸிக் பார்க்' இறுதிப்பகுதி: ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜுராசிக் பார்க் சகாப்தத்தின் இறுதிப்பகுதி இந்திய பார்வையாளர்களை விரைவில் வந்தடைய உள்ளது. வரும் ஜூன் 10ஆம் தேதி வெளியாகும் ஜுராசிக் வேர்ல்ட் டாமினியன் திரைப்படதிற்கான முன்பதிவு, இந்தியாவின் ஒரு சில நகரங்களில், இப்போதே ஆரம்பித்துவிட்டது.

ஜுராசிக் வேர்ல்ட் படத்தொடரின் இறுதி பாகமாக வெளியாக இருக்கும் இந்த ‘ஜுராசிக் வேர்ல்ட் டாமினியன்’ திரைப்படம், பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை தகர்க்குமென பெரிதும் நம்பப்படுகிறது. ஏனெனில் இதுவரை இது வெளியான அனைத்து நாடுகளிலும் ரசிகர்களிடம் பெரிய அதிர்வலையை இப்படம் ஏற்படுத்தியுள்ளது. பெரிய திரையில் ஜூராசிக் பார்க் படத்தின் அனுபவத்தை ரசிகர்கள் ரசிப்பது இதுவே கடைசி முறையாக இருக்கும் என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதுகுறித்து உற்சாகம் மற்றும் எதிர்பார்ப்பு உயர்ந்துள்ளது.

image

ஜூன் 10ஆம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்துக்காக 60 நகரங்கள் மற்றும் 228 திரைகளில் இப்போது முன்பதிவுகள் துவங்கப்பட்டிருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்னரே ஆரம்பித்துள்ள இந்த முன்பதிவுகளை வைத்து கணிக்கையில், இப்படம் அரங்கம் நிறைந்த திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மும்பை, புனே, கோவா, அகமதாபாத், டெல்லி, சூரத், இந்தூர், ஹைதராபாத், பெங்களூர், சென்னை உட்பட  பல நகரங்கள் இந்த முன்பதிவு பட்டியலில் உள்ளன.

image

மிக சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்னதாக படக்குழுவினர் இப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்.  ஜுராசிக் பார்க் திரைப்படங்களில் வந்த மூன்று முக்கியமான கதாபாத்திரங்கள் மீண்டும் இந்த திரைப்படத்தில் வருவது, ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை தந்துள்ளது. இப்படத்தில் நடிகர் Sam Neill இப்படத்தில் Dr. Alan Grant கதாபாத்திரத்திலும், Dr. Ellie Sattler கதாபாத்திரத்தில் நடிகை Laura Dern வும், Dr. Ian Malcom கதாபாத்திரத்தில் நடிகர் Jeff Goldblum மும் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க… தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: முழு அறிக்கையை முதல்வரிடம் சமர்பித்தது ஒருநபர் ஆணையம்

`டைனோசர்களும் மனிதர்களும் இணைந்து வாழ முடியுமா?’ என்று அதிகம் பேசப்படும் வாதத்தை, இப்படம் இன்னும் பிரம்மாண்டமாக காட்டவிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. திரை வரலாற்றில் மிகவும் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்பட தொடருக்கு, ஒரு அற்புதமான பெரிய பிரியாவிடையாக இப்படம் இருக்குமென்றும் படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக 2015 இல் வெளியான ஜுராசிக் வேர்ல்ட் திரைப்படம் மூலம் 1.7 பில்லியன் டாலர் உலக வசூல் சாதனையை நிகழ்த்திய Colin Trevorrow தான், இந்த ஜுராசிக் வேர்ல்ட் டாமினியன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். Michael Crichton உருவாக்கிய கதாபாத்திரங்களை அடிப்படையாக வைத்து Derek Connolly (Jurassic World) & Trevorrow உருவாக்கிய கதைக்கு, Emily Carmichael & Colin Trevorrow திரைக்கதை எழுதியுள்ளனர். இந்த ஜுராசிக் வேர்ல்ட் டாமினியன் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜூன் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

image

இத்திரைப்படம் திரையரங்குகளில் ஜூன் 10ஆம் தேதி, ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 3D, IMAX 3D, 4DX & 2D-ல் இப்படம் வெளியாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.