ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் அருகே டயர் வெடித்து எதிரே வந்த லாரி மீது கார் மோதி தீப்பிடித்ததில் காரில் பயணம் செய்த 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
திருப்பதி அடுத்த பாக்ராபேட்டையை சேர்ந்த இம்ரான் மற்றும் இவரது நண்பர் உள்பட மூன்று பேர் காரில் ஸ்ரீசைலத்திற்கு புறப்பட்டனர். இவர்களது கார் திப்பைப்பாலம் கிராமம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக காரின் டயர் வெடித்து எதிர்திசையில் சென்ற லாரி மீது மோதியது.
இதில் டீசல் டேங்கரில் பிடித்த தீ கார் முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது. இந்த விபத்தில் கார் ஓட்டுனர் ரவூரி தேஜா, பதான் இம்ரான் கான், சகிரி பாலாஜி ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர்.