கரூர் : தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மழையின் காரணமாக கடந்த 2 நாட்கள் மின் நுகர்வு குறைந்துள்ளது என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் சொந்த மின் உற்பத்தி 50 சதவீதத்தை எட்டும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.