புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 1,829 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று தெரிவித்தது.
நேற்று பாதிப்பு 1,569 ஆக இருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. அதேநேரம் தொடர்ந்து 2-வது நாளாக பாதிப்பு இரண்டாயிரத்திற்கும் கீழ் உள்ளது.
இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 27 ஆயிரத்து 199 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் மேலும் 33 பேர் பலியாகி உள்ளனர். இதில் கேரளாவில் திருத்தியமைக்கப்பட்ட பட்டியலில் 31 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர நேற்று டெல்லியில் 2 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,24,293 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 87 ஆயிரத்து 259 ஆக உயர்ந்தது. இதில் நேற்று 2,549 பேர் அடங்குவர்.
தற்போது 15,647 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 753 குறைவு ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 14,97,695 டோஸ்களும், இதுவரை 191 கோடியே 65 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.