திருச்சியில், பசுமை வீடு திட்டத்தின் கீழ் பயன்பெற மலைவாழ் மக்களிடம், வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
பாளையம் கிராம மலைவாழ் மக்கள் பசுமை வீடு திட்டத்தின் கீழ் பயன்பெற, துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அணுகியுள்ளனர்.
அங்கு வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரியும் மணிவேல், ஒரு வீட்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம் லஞ்சம் கேட்டதாக கூறப்படும் நிலையில், அக்கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் 15 ஆயிரம் ரூபாய் பணத்தை மணிவேலிடம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
லஞ்ச பணத்தை மணிவேல் பெறுவதை அங்கிருந்த நபர் ஒருவர் எடுத்ததாக கூறப்படும் வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.