தூத்துக்குடியில் திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற பெண்ணை துன்புறுத்தியதாக ஒரு எஸ்.ஐ உட்பட 4 பெண் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
முத்தையாபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரது வீட்டில் கடந்த 4ஆம் தேதி 10 சவரன் நகை மாயமான நிலையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுமதி என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக அவர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்படி 3 பெண் காவலர்கள் சுமதியை காவல் நிலையம் அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்யாமல் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தினர் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்தான புகாரில் அந்த 3 பெண் காவலர்களும் விசாரணை அதிகாரியாக இருந்த உதவி ஆய்வாளர் முத்துமாலை என்பவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காததற்காக தனிப்பிரிவு காவலர் முருகன் என்பவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.