ஐபிஎல் போட்டியில் நடராஜன் எதிரணி வீரரை அசத்தலாக ரன் அவுட் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 65வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் அணியும் மோதிய நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில்லிங் வெற்றியை சுவைத்தது.
இப்போட்டியில் ஹைதராபாத் வீரர் யார்க்கர் மன்னன் நடராஜன் பந்துவீச்சை எதிரணி வீரர்கள் விளாசி தள்ளிவிட்டனர்.
ஒருபுறம் 4 ஓவர்களில் அவர் 60 ரன்கள் என்று விளாசப்பட்டார்.
ஆனால் 157/6 என்ற நிலையில் நடராஜன் 18வது ஓவரை வீச வந்தார். ஆனால் யார்க்கர் புல் டாஸ் ஆக முதல் பந்தையே மலை மனிதன் டிம் டேவிட் சிக்சருக்குத் தூக்கினார்.
அடுத்த பந்து வைடு, அடுத்த பந்து யார்க்கர் நேராக அடித்தார் டிம் டேவிட் ஒரு சிங்கிளுக்கான வாய்ப்பு இருந்தும் வேண்டாம் என்று மறுத்தார் ஆனால் அதன் பலனை அடுத்தடுத்த பந்துகளில் நடராஜன் அனுபவித்தார். மீண்டும் புல்டாஸ் ஸ்கொயர் லெக்கில் சிக்ஸ். மீண்டும் அதே கதை மீண்டும் அதே இடத்தில் சிக்ஸ். அடுத்த பந்து மீண்டும் புல்டாஸ் சிக்ஸ்.26 ரன்கள் ஏற்கெனவே வந்து விட்டன.
இந்த நிலையில்தான் கடைசி பந்தை டிம் டேவிட் நேராக அடிக்க பந்தை நடராஜன் தடுத்தார் ஆனால் பந்து உருண்டு நான்-ஸ்ட்ரைக்கர் ஸ்டம்பை நோக்கி உருண்டு சென்றது, ரன்னர் ரமந்தீப் சிங் சிங்கிள் வேண்டாம் என்று இருந்தார்.
ஒரே இடத்தில் நின்ற ராஜபக்ச மற்றும் தவான்! லட்டு போன்ற ரன் அவுட்டை கோட்டை விட்ட வீரர் வீடியோ
ஆனால் டிம் டேவிட் வலுக்கட்டாயமாக ஓட நடராஜன் பந்தை நோக்கி ஸ்டம்ப் அருகே வந்தார் பந்தை எடுத்து ஸ்டம்பில் அடிக்க டிம் டேவிட் கொஞ்ச தூரம் தள்ளி முடிந்து ரன் அவுட் ஆனார்.
அவர் 18 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்கள் என்று 46 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனதில் மும்பை இந்தியன்ஸின் வெற்றி கனவு தகர்ந்தது. மோசமான ஓவருக்கு கடைசி ரன் அவுட் மூலம் நடராஜன் நியாயம் செய்தார்.