கர்நாடகா தலைநகர் பெங்களூரில் ஒரே பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் குழு மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோதலில் ஈடுபட்ட மாணவிகள் அனைவரும் பெங்களூரில் உள்ள பிரபலமான பிஷ்ப் காட்டன் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை விட்டல் மல்லையா சாலைக்கு அருகே இச்சம்பவம் நடந்துள்ளது.
மாணவிகள் பேஸ்பால் மட்டை, தடி மூலம் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட காணொளி காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
மாணவிகள் இவ்வாறு மோதலில் ஈடுபட்டதற்கான காரணம் தெரியவில்லை.
4/2 pic.twitter.com/bbYerilicg
— Harsha H Hanumegowda ™ (@Harsha_Reports) May 18, 2022
எனினும், ஆண் நண்பர் காரணமாக இரண்டு மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையே இரு குழுவுக்கு இடையேயான மோதலாக வெடித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
4/3 pic.twitter.com/TsD65BJn2l
— Harsha H Hanumegowda ™ (@Harsha_Reports) May 18, 2022
இதில் மாணவி ஒருவருக்கு முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. மோதல் தீவிரமடைய சம்பவயிடத்தில் இருந்த பொதுமக்கள் தலையிட்டு சண்டையை நிறுத்தியுள்ளனர்.