நெசவுத் தொழிலில் முன்னேற்றத்தைக் கொண்டுவருவதற்காக இந்திய பருத்தி கவுன்சிலை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
பஞ்சு, நூல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்காகத் தொழிலதிபர் சுரேஷ் பாய் கோட்டக் தலைமையிலான இந்திய பருத்தி கவுன்சிலை அரசு உருவாக்கியுள்ளது.
கவுன்சிலின் முதல் கூட்டம் மே 28ஆம் நாள் நடைபெறும் என்று மத்திய ஜவுளி அமைச்சகம் தெரிவித்துள்ளது.