கடந்த 9ம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற விவாதம் இரண்டாவது தினமாக இன்றும் நடைபெற்றது.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சர்வகட்சிகளை உள்ளடக்கிய அரசாங்கத்தின் அவசியத்தை பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா வலியுறுத்தினார். சகல சந்தர்ப்பங்களிலும் மக்களின் பக்கம் நின்று பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென்றும் அவர் கூறினார்.
சட்டத்தை அமுல்படுத்துவதில் பொலிசார் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென்று விவாதத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார
ஜனாதிபதி, பதவியிலிருந்து விலகினால் மாத்திரம் மக்களின் போராட்டம் முற்றுப் பெறப் போவதில்லை . பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்குத்; தீ மூட்டப்பட்டமை தொடர்பில் அவர் தனது கவலையைத் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன
நாடுதழுவிய ரீதியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள்கண்டிக்கப்படவேண்டும். வன்முறையின் போது சேதமடைந்த சொத்துகளுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.
தற்போதைய நெருக்கடி மிகுந்த சந்தர்ப்பத்தில் பிள்ளைகள் பற்றி விசேட கவனம் செலுத்த வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும விவாதத்தின் போது தெரிவித்தார்;
தற்காலிகமாக பிரிந்து செயற்பட்ட போதும் மீண்டும் ஒன்றிணைந்து செயற்படுவது சகலரதும் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்;.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்குமாறு முன்வைக்கும் கோரிக்கை நியாயமற்றதென்று பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள கூறினார். மக்கள் எரிபொருளுக்கு வரிசையில் காத்திருக்கும் போது இவ்வாறான கோரிக்கை பொருத்தமற்றது என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன்:
அரசியலில் இருந்து மதத்தை விலக்கி வைக்க வேண்டும். பௌத்த மதமாகயிருந்தாலும் இந்து அல்லது வேறு எந்த மதங்களாக இருந்தாலும் இலங்கை அரசியலில் மதங்களுக்கு முக்கியத்துவம் வழங்கக் கூடாது.அரசிலில் மதத்திற்கு முக்கியத்துவம் வழங்கியதினாலேயே நாடு இன்றைய வங்கு ரோத்து மற்றும் துர்ப்பாக்கிய நிலைக்கு காரணம் என்பதை இப்போதாவது உணரவேண்டும்.
தீவைப்பு தமிழர்களாகிய எங்களுக்கு புதிதல்ல. 1983 எங்கள் ஹவ்லக் வீதியில் இரண்டு வீடுகளை தீயிட்டனர். எங்கள் புறக்கோட்டை வியாபார நிலையத்தையும் கொளுத்தினார்கள். ஒரு கம்பீரமான சினிமா கலைஞரான என் தந்தை வி.பி கணேசன் இன்னும் 25 வருடங்கள் வாழும் கம்பீரமாக இருந்த அவர். பின் மனமுடைந்து சில காலம் வாழ்ந்து இறந்தார்.
என் நண்பன் ரவிராஜ். ,ன்றுள்ள டிஎன்ஏ எம்பிக்கள் புதியவர்கள். அவர்களுக்கு அவரை தெரியாது. ஆனால் எனக்கு நன்கு தெரியும். கொழும்பில் வாழ்ந்த நாம் 2001ம் ஆண்டில் இருந்தே நல்ல நண்பர்கள்.
சிங்கள மக்களுக்கு தமிழர் பிரச்சினையை சிங்களத்தில் சொல்ல முயன்றார் அதனால் அவர் கொல்லப்பட்டார். அன்று நானும், ரவியும் சேர்ந்து பலவந்த கடத்தல், சட்ட விரோத படுகொலைகள், வெள்ளை வான் கலாச்சாரத்துக்கு எதிராக போராடினோம். என்னையும், ராகமை, களுத்துறை, தெமட்டகொடை ஆகிய மூன்று ,டங்களில் கொல்ல முயன்றார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா:
அவசரகாலச் சட்டம் ,ன்று எதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டது. மக்கள் பாதுகாப்பு கருதியே முன்னர் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது அரசின் ,ருப்பைத் தக்கவைத்துக்கொள்ள அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எமது கட்சிக்காரர்கள் தவறிழைத்தால்கூட தண்டனை வழங்கப்படவேண்டும்.
9 ஆம் திகதி நடைபெற்ற சம்பவம் தொடர்பில் நாமும் கவலை அடைகின்றோம்.