ஷார்தா க்ரோப்கெம் பங்கு விலையானது கடந்த 5 அமர்வுகளில் 10.95 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் சென்செக்ஸ் 0.35 சதவீதம் அதிகரித்துள்ளது.
பிஎஸ்இ சென்செக்ஸ் கடந்த ஆறு மாதங்களில் 8.92% சரிவினைக் கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் 110.84 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.
1 வருடத்தில் சென்செக்ஸ் 8.22% அதிகரித்துள்ளது. இதே கடந்த ஒரு ஆண்டில் இருந்து, இந்த மல்டிபேக்கர் பங்கு விலையானது 105.53 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இதே இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, 98.43 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு எதிரொலி.. ஜிஎஸ்டி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு!
வாங்கலாம்
இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவானது வெளியாகி வந்த நிலையில், இப்பங்கின் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தரகு நிறுவனமான ஆனந்த ரதி இந்த பங்கின் விலையானது ஏற்றம் காணலாம் என கூறியது குறிப்பிடத்தக்கது. இதன் இலக்கு விலையானது ஒரு பங்குக்கு 835 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதன் தற்போதைய சந்தை விலை 706 ரூபாயாக உள்ளது.
வருவாய் விகிதம்
மார்ச் 31, 2022வுடன் முடிவடைந்த காலாண்டில், இந்த நிறுவனத்தின் செயல்பாட்டின் மூலம் கிடைத்த ஒருங்கிணைந்த வருவாய் விகிதமானது, 31.8 சதவீதம் அதிகரித்து, 1434.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய நிதியாண்டில் 1088.13 கோடி ரூபாயாக உள்ளது. இதே கடந்த நிதியாண்டில் 49.4 சதவீதம் அதிகரித்து, 3579.8 கோடி ரூபாயாக உள்ளது. இதே கடந்த 2021ம் நிதியாண்டில் 2395.60 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இபிஎஸ் விகிதம்
நிகரலாபம் 32.2 சதவீதம் அதிகரித்து, 177 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 133.93 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த மார்ச் 31, 2022ம் காலாண்டில் இபிஎஸ் விகிதம் 19.62 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 14.84 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இந்த நிறுவன வாரியம் ஒரு பங்குக்கு 3 ரூபாய் டிவிடெண்டினை அறிவித்துள்ளது. இதன் முகமதிப்பு 10 ரூபாயாகும்.
எதிர்பார்ப்பு
2023ம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் எபிட்டா மார்ஜின் விகிதம் 20 – 22 சதவீதம் அதிகரிக்கலாம் என்றும், வருவாய் வளர்ச்சி விகிதமானது 15 – 20% ஆக அதிகரித்துள்ளது. இது சர்வதேச அளவில் அதிகரித்து வரும் அக்ரி பொருட்களுக்கான தேவைக்கு மத்தியில் இந்த வளர்ச்சியானது அதிகரிக்கலாம் என மதிப்பிட்டுள்ளது.
கேப்பெக்ஸ்
இதே CAPEX விகிதமானது, 3.8 – 4 பில்லியன் டாலர்களுக்குள் 2024ம் நிதியாண்டில் இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மீடியம் டெர்மில் சப்ளை சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது முதல் காலாண்டில் சற்று தாக்கத்தினை ஏற்படுத்தலாம். அதேபோல சீனாவிலும் நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில், அதுவும் மீடியம் டெர்மில் சற்று தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடும்.
இலக்கு விலை நிர்ணயம்
எனினும் நீண்டகால நோக்கில் அதிக இப்பங்கின் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே 2022 – 2024 நிதியாண்டில் இப்பங்கினை வாங்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இலக்கு விலை 835 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர்.
This multibagger chemical stock surges 110% in just one year
With the release of Sharda Cropchem’s March quarter results, experts predict that the share price could rise. The target price is set at Rs 835 per share.