முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையானதை பேரறிவாளன் பறையடித்து கொண்டாடியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரிய வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இன்று (மே 18) இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆளுநர் முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு.
ஆளுநர் முடிவை தாமதப்படுத்தினால், அதனை நீதிமன்றம் பரிசீலனை செய்யலாம். அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142-ஆவது பிரிவை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்கிறது என்று தீர்ப்பளித்தது.
தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து ஜோலார்பேட்டையில் பேரறிவாளன் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதன்போது அவர் பறையடித்து தனது விடுதலையை கொண்டாடினார். இந்த நிகழ்வின் போது அவரது தாய் அற்புதம்மாளும் உடனிருந்தார்.
Video: Venkatachalapathy / The Hindu #Perarivalan celebrates his release. pic.twitter.com/P6yqp10uFh
— D Suresh Kumar (@dsureshkumar) May 18, 2022
பேரறிவாளனை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் பயன்படுத்திய சட்டப்பிரிவு 142 என்றால் என்ன?