புது டெல்லி :
பொதுத்துறை நிறுவனமான ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்’ நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக விற்க, மத்திய அரசு திட்டமிட்டது.
ஆனால், பி.பி.சி.எல்., நிறுவனத்தை முழுமையாக வாங்க, யாரும் முன்வரவில்லை. இதையடுத்து அந்த நிறுவனத்தின் 20 – 25 சதவீத பங்குகளை மட்டும் தற்போதைக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வேலைகள் தற்போது நடந்து வருவதாக, பெட்ரோலியத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எல்.ஐ.சியின் பொதுப்பங்குகள் சமீபத்தில் விற்கப்பட்ட நிலையில், தற்போது பி.பி.சி.எல் நிறுவனத்தையும் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.