புதுடெல்லி:
இந்த மாதம் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனிக்கு சென்றிருந்தார். அப்போது சிறுவன் ஒருவனுடன் மோடி உரையாடும் போது அந்த சிறுவன் ‘ஜென்மபூமி பாரத்’ என்ற பாடலை பாடினான்.
இதனை, காமெடி நடிகர் குணால் கம்ரா ‘ஜென்மபூமி பாரத்’ பாடலுக்கு பதிலாக விலைவாசி உயர்வுக்கான பாடலை மாற்றி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து , சிறுவனின் தந்தை அவரது டுவிட்டர் பதிவில் குணால் கம்ராவை சாடியதோடு மட்டுமல்லாமல் உங்கள் இழிவான அரசியலில் இருந்து என் மகனை தள்ளி வையுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், மே 5-ஆம் தேதி தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் குணால் கம்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியது.
இருப்பினும் இதுவரை எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையும் பெறப்படவில்லை என்பதால், தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களுடன் ஆஜராக வேண்டும் இன்று டுவிட்டர் கம்யூன்கேஷன் இந்தியா இயக்குநருக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.