ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடல்நிலை குறித்த ஊகங்களுக்கு மத்தியில் அவருக்கு புதிதாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சமீபத்தில் தனது வயிற்றில் இருந்து திரவத்தை அகற்ற அறுவை சிகிச்சை செய்தார் என்று எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சை “சிறப்பாக மற்றும் சிக்கல்கள் இல்லாமல் நடந்தது” என்று அறிக்கை மேலும் கூறியது.
மே 12 முதல் மே 13 வரை ஒரு இரவு முழுவதும் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும், ஆனால் அது புற்றுநோயுடன் சம்பந்தப்பட்டது இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அறுவைசிகிச்சை காரணமாக அரசாங்க அதிகாரிகளுடன் திட்டமிடப்பட்ட சந்திப்பை புடின் தவறவிட்டார். அதற்கு பதிலாக, கூட்டத்தில் ஜனாதிபதியின் முன் பதிவு செய்யப்பட்ட வீடியோ செய்தி ஒலிபரப்பப்பட்டது என்று எக்ஸ்பிரஸ் அறிக்கை கூறுகிறது.
புடினின் அறுவை சிகிச்சை மற்றும் அதைத் தொடர்ந்து குணமடைந்ததை அடுத்த நாளே “deepfake” தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மூடி மறைக்கப்பட்டதாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் நடந்த வெற்றி தின கொண்டாட்டங்கள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் புடின் பலவீனமாக தோன்றியதை அடுத்து, அவரது உடல்நிலை குறித்த செய்தி முக்கியத்துவம் பெற்றது.