புடின் விட்ட அம்பு அவரையே திரும்பி வந்து தாக்கப்போகுது! உக்ரைன் போர் சூழலில் ட்விஸ்ட் வைத்த நாடுகள்


ஃபின்லாந்து மற்றும் சுவீடனுக்கு ரஷ்யா மீண்டும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி போர் தாக்குதலை தொடங்கிய நிலையில் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
இந்தப் போர் தொடங்கிய சமயத்திலேயே, ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த ராணுவ நடவடிக்கையைத் தொடங்குவதாக புடின் குறிப்பிட்டு இருப்பார்.

அதாவது அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய விரும்பியது. அப்படி நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால், அது தங்களுக்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதியே புடின் இந்த போருக்கு உத்தரவிட்டார்.

ஆனால், புடினுக்கே இப்போது இது ஃபேக் பையர் ஆகி உள்ளது, அதாவது புடின் விட்ட அம்பு அவரையே திரும்பி வந்து தாக்குவது போல உக்ரைன் போல தங்கள் நாடுகள் மீதும் கூட புடின் எப்போது வேண்டுமானாலும் போரை ஆரம்பிக்கலாம் என்று நடுநிலை நாடுகள் யோசிக்கத் தொடங்கிவிட்டன.

புடின் விட்ட அம்பு அவரையே திரும்பி வந்து தாக்கப்போகுது! உக்ரைன் போர் சூழலில் ட்விஸ்ட் வைத்த நாடுகள்

விஸ்கி, பிராந்தி, பீர் என்ன புனித நீரா? தமிழக அரசை வெளுத்து வாங்கிய சீமான்

இதையடுத்து ஃபின்லாந்து மற்றும் சுவீடன் இப்போது நேட்டோவில் இணைய முடிவு செய்துள்ளன.
இது ரஷ்யாவுக்கு கடும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
ஏனென்றால், பின்லாந்தும் ரஷ்யாவும் சுமார் 1300 கிமீ எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்தால், பின்லாந்து நாட்டில் நேட்டோ படைகளால் ராணுவத்தைக் குவிக்க முடியும். உக்ரைனில் எது நடக்கக் கூடாது என்று ரஷ்யா விரும்பியதோ அது இப்போது மற்ற நாடுகளில் நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் புடின் ஏற்கனவே பின்லாந்து அதிபருடன் பேசினார், ஆனால் அதை பொருட்படுத்தாமல் பின்லாந்து மற்றும் சுவீடன் நாடுகள் நேட்டோவில் இணைவதாக அறிவித்துள்ளது. 

புடின் விட்ட அம்பு அவரையே திரும்பி வந்து தாக்கப்போகுது! உக்ரைன் போர் சூழலில் ட்விஸ்ட் வைத்த நாடுகள்

சர்பத் விற்றவர் கைக்கு பின்னாளில் வந்த பல கோடிகள் பணம்! தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய தமிழர்

ரஷ்ய வெளியுறவு இணை அமைச்சர் செர்ஜி, இது மற்றொரு பெரிய தவறு. இது பொது வெளியில் தேவையின்றி ராணுவ பதட்டங்கள் அதிகரிக்கும். தற்போதைய சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த முடிவெடுக்கும்போது, சில அபத்தமான கருத்துக்களுக்கு இடம் அளிப்பது வருத்தமளிக்கிறது.

நேட்டோவில் இணையும் நடவடிக்கையால் இரு நாடுகளின் பாதுகாப்பு பலப்படும் என்று நினைத்தால், கண்டிப்பாக அது நடக்காது. இதற்குப் பதில் கொடுக்கும் வகையில் தக்க நடவடிக்கை எடுப்போம். இதை எல்லாம் சகித்துக்கொள்வோம் என்று அவர்கள் ஒருபோதும் நினைத்துவிடக் கூடாது என கூறியுள்ளார்.

புடின் விட்ட அம்பு அவரையே திரும்பி வந்து தாக்கப்போகுது! உக்ரைன் போர் சூழலில் ட்விஸ்ட் வைத்த நாடுகள்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.