நம் அண்டை நாடான இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.புதிய இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்நாட்டு பார்லிமென்ட் நேற்று முன் தினம் முதல்முறையாக கூடியது. ரூ.408 கோடி பாக்கிஇந்நிலையில், இலங்கையின் மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகரா பார்லிமென்டில் நேற்று கூறியதாவது:கடந்த ஜனவரியில், நம் நாட்டுக்கு பெட்ரோலியப் பொருட்களை அளித்த நிறுவனத்துக்கு 408 கோடி ரூபாய் பாக்கி உள்ளது.அதே நிறுவனத்தின் பெட்ரோலை ஏற்றி வந்த கப்பல், நம் கடல் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக நிற்கிறது. ‘பழைய தொகையுடன், தற்போது ஏற்றி வந்துள்ள பெட்ரோலுக்கும் சேர்த்து பணம் கொடுத்தால் மட்டுமே, அதை இறக்கி செல்வோம்’ என, கப்பல் நிறுவனம் தெரிவித்தது.பழைய தொகையை அளிக்க இலங்கை மத்திய வங்கி உறுதி அளித்து உள்ளது.இதை ஏற்று, தற்போது வந்துள்ள பெட்ரோலை வழங்க கப்பல் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
இன்னும் இரு தினங்களில் பெட்ரோல் கிடைத்து விடும்.கையிருப்புதற்போது பெட்ரோல் வாங்க தேவையான அமெரிக்க டாலர்கள் கையிருப்பு இல்லை.எனவே, பெட்ரோல் நிலையங்களில் மக்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவும். தேவையான அளவு டீசல் கையிருப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, ”இலங்கை அரசுக்கு 1,232 கோடி ரூபாய் கடன் உதவியை உலக வங்கி அளித்துள்ளது. உலக வங்கியிடம் இருந்து பெறும் தொகையை எரிபொருள் வாங்க பயன்படுத்த முடியாது.”இதில் ஒரு பகுதியை எரிபொருள் வாங்க பயன்படுத்த முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்,” என, இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பார்லி.,யில் நேற்று தெரிவித்தார்.
பார்லி., கூட்டத்தில்
மகிந்த பங்கேற்புஇலங்கையில் கடந்த 9ம் தேதி நடந்த கலவரத்துக்கு பின், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே, திரிகோணமலையில் உள்ள கப்பல்படை தளத்துக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.அதன் பின் வெளியே தலைகாட்டாத அவர், நேற்று நடந்த பார்லி., கூட்டத்தில் முதல்முறையாக பங்கேற்றார். அவருடன், முன்னாள் அமைச்சரும், மகனுமான நமல் ராஜபக்சேவும் பார்லி., வந்திருந்தார்.