பேரறிவாளன் விடுதலைக்கு காங்கிரஸ் எம்.பி. மணிக்கம் தாகூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரிய வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலர் மகிழ்ச்சி தெரிவித்து வருவதற்கு மத்தியில், தமிழக காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும், நாளை போராட்டம் முன்னெடுக்கப்படும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
இதனிடையே, பேரறிவாளன் விடுதலைக்கு விருதுநகர் எம்.பி-யும், மக்களவை காங்கிரஸ் கொறாடாவுமான மணிக்கம் தாகூரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக போராட்டம்! தமிழக காங்கிரஸ் அறிவிப்பு
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது, குற்றவாளிகள் கொலைகாரர்கள் அவர்கள் நிரபராதிகள் அல்ல.. உச்சநீதி மன்றதால் தண்டனை பெற்றவர் . இன்று விடுதலை .
அன்று கோபல் கோட்சே, இன்று பேரறிவாளன் என காங்கிரஸ் எம்.பி மணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.