பேரறிவாளன் விடுதலை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
31 ஆண்டுகால சிறைவாசம் முடிவுக்கு வருகிறது
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு
நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார் பேரறிவாளன்
கடந்த 11-ந் தேதி அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது
2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ந் தேதி தமிழக சட்டப்பேரவையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி மீண்டும் தீர்மானம்
தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடியது மத்திய அரசு
அரசியல் சாசனம் 161-வது பிரிவின் படி 7 பேரையும் விடுவிக்க அதிகாரம் உள்ளதாக முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பு வழங்கி இருந்தார்