பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு

The Supreme Court today gave its verdict in the case of former Prime Minister Rajiv Gandhi’s assassination, in which Perarivalan continued to demand his release: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் விடுதலை வழங்கி புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையில், அரசியல் அமைப்பில் மத்திய அரசுக்கு உள்ள அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை சுட்டிக்காட்டி மத்திய அரசு வாதிட்டது. சிபிஐ விசாரணை செய்த வழக்கில் மாநில அரசு விடுதலை செய்ய அதிகாரம் இல்லை என்று வாதிட்டது.

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் முடிவெடுப்பது யார் என்று ஏன் பேரறிவாளன் சிக்கிக்கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றமே பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யக்கூடாது. அப்போதுதான் சரியாக இருக்கும் என்று உச்ச நீதிமன்ற கூறியது.

தமிழக அரசும், ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய விவகாரத்தில் குடியரசுத் தலைவரை தலையிட வைப்பது ஏன்? அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டிருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்று வாதிட்டது.

பேரறிவாளன் விடுதலை செய்யக் கோரிய வழக்கில் அண்மையில், மத்திய அரசு, மாநில அரசு, மற்றும் பேரறிவாளன் தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.