லண்டன்—–ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பணவீக்கம், 40 ஆண்டுகாலத்தில் இல்லாத வகையில், 9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, அங்கு பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற பயம் அதிகரித்து வருகிறது.தேசிய புள்ளியியல் அலுவலக தரவுகளின் படி, பிரிட்டனில், கடந்த மார்ச் மாதத்திலேயே பணவீக்கம் அதிகரித்து, 7 சதவீதமாக உயர்ந்திருந்தது.இந்நிலையில், ஏப்ரலில் பணவீக்கம் 9 சதவீதமாக அதிகரித்து உள்ளது.இது குறித்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும்,
‘ இன்போசிஸ்’ நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனும் பிரிட்டனின் நிதியமைச்சருமான, ரிஷி சுனாக் கூறியதாவது:எரிபொருள் விலை உயர்வு காரணமாக, ஏப்ரலில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இந்த உலகளாவிய சவால்களிலிருந்து மக்களை முழுமையாக பாதுகாக்க முடியாது.ஆனால், எங்களால் முடிந்த வரை, எங்கு முடியுமோ, அங்கு ஆதரவை தருகிறோம். பணவீக்கத்தை கட்டுப்படுத்த, மேலும் நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
லண்டன்—–ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பணவீக்கம், 40 ஆண்டுகாலத்தில் இல்லாத வகையில், 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. nsimg3032664nsimg இதையடுத்து, அங்கு பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற பயம் அதிகரித்து
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.