போக்குவரத்துக் கழகத்தை நஷ்டத்தில் இருந்து மீட்க மாநில அரசு அசத்தல் திட்டம்!

தமிழ்நாட்டை போலவே கேரள மாநில அரசுப் போக்குவரத்து கழகமும் நஷ்டத்தில்தான் இயங்கி வருகின்றது. இதனால் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு மாதாந்திர ஊதியம் வழங்குவதிலும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதனையடுத்து அரசுப் போக்குவரத்து கழகத்தை நஷ்டத்தில் இருந்து மீட்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை
கேரள மாநில அரசு
மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கிய அம்சமாக பணிமனைகளில் பயனற்று நிறுத்தப்பட்டிருக்கும் காலாவதியான பேருந்துகளை மறுசுழற்சி செய்து வேறு பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, முதற்கட்டமாக மலை கிராமங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் உள்ள அரசுப் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காலாவதியான பேருந்துகளை தங்கும் அறைகளாக மாற்றி வாடகைக்கு விடும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, பேருந்துகளை வகுப்பறைகள், நூலகங்களாக மாற்றி பள்ளிகளுக்கு வாடகைக்கு விடும் திட்டமும் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, இந்தத் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காலாவதியான பேருந்துகளை காயலான் கடையில் எடைக்கு போட்டால் இரும்புக்கு தற்போதுள்ள சந்தை நிலவரப்படி 2.5 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். இதுவே பேருந்துகளை வகுப்பறைகள், தங்கும் அறைகளாக மாற்றி வாடகைக்கு விட்டால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று கேரள மாநில போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.