ஆந்திராவில், மதுபாட்டில்களை கடனுக்கு தர மறுத்த மதுக்கடை ஊழியரை, கடைக்குள் புகுந்து இளைஞர்கள் சிலர் சரமாரியாக தாக்கிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
கோபுவானிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைக்கு நேற்று மாலை சென்ற 3 இளைஞர்கள், கடை ஊழியர் சீனிவாசராவிடம் மதுபாட்டில்களை கடனாக கேட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு சீனிவாசராவ் மறுப்பு தெரிவித்ததால் இளைஞர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது. வாக்குவாதம் கைகலப்பாக மாற, இளைஞர்கள் மூவரும் கடைக்குள் புகுந்து சீனிவாசராவை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மதுக்கடை ஊழியர் அளித்த புகாரின் பேரில், தப்பியோடிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.