சீனாவில் கடந்த மார்ச் மாதம் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் போயிங் 737-800 அதன் விமானி அல்லது பயணிகள் யாரேனும் ஒருவரின் கட்டளையின் படியே விமானம் விபத்துகுள்ளாகி இருப்பதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் கடந்த மார்ச் மாதம் 21ம் திகதி 132 பயணிகளை ஏற்றிக் கொண்டு
குன்மிங்-கில் இருந்து குவாங்சூ நோக்கி பயணித்த பயணிகள் விமானம் போயிங் 737-800 குவாங்சி மலைப் பகுதியில் செங்குத்தாக மோதி விபத்துகுள்ளானது.
இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த விமானி உட்பட 132 பயணிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து வெளியான போயிங் 737-800-யின் செங்குத்தாக விபத்துகுள்ளான வீடியோ பதிவுகள், விபத்துகுறித்த பெரும் சந்தேகத்தை அனைவரிடமும் ஏற்படுத்தியது.
இந்தநிலையில், போயிங் 737-800-யின்(Boeing 737-800) கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில், விபத்துகுள்ளான விமானம் அதன் விமானி மற்றும் விமான அறைக்குள் அத்துமீறி நுழைந்த யாரேனும் ஒருவரால் தான் விபத்துகுள்ளாகி இருப்பதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த செங்குத்தான விமான விபத்து மனித சக்தியால் திட்டமிடப்பட்ட கொலை- தற்கொலை முயற்சி என வல்லுநர்கள் நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: உலக அமைப்புகளில் இருந்து வெளியேறும் ரஷ்யா: புடின் எடுத்துள்ள அதிரடி முடிவு!
மேலும் விமானம் மனித சக்திகளால் வழங்கபட்ட கட்டளைகளின் அடிப்படையிலேயே செயல்பட்டு மலைக்குன்றின் மீது செங்குத்தாக மோதி மோதியுள்ளது என தெரிவித்துள்ளனர்.