இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் அடுத்தடுத்து காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வரும் நிலையில் இன்று ஐடிசி, ஆதித்யா பிர்லா பேஷன்ஸ், போன்ற பல நிறுவனங்கள் தனது முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
மார்ச் காலாண்டு முடிவுகள் பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் ரீடைல் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் இதில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வேண்டியுள்ளது.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. கச்சா எண்ணெய், நிலக்கரி விலை உயர்வில் லாபம் பார்க்கும் அம்பானி, அதானி!
ஐடிசி
இந்தியாவின் மிகப்பெரிய FMCG நிறுவனமான ஐடிசி மார்ச் காலாண்டில் 11.80 சதவீத உயர்வில் 4,190.96 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. இதோபோல் வருவாயில் 16.02 சதவீத உயர்வில் 16,426 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளது.
ஐடிசி ஈவுத்தொகை
மேலும் பங்கு முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 6.25 ரூபாய் ஈவுத்தொகையை அறிவித்துள்ளது ஐடிசி. சிகரெட் வணிகத்தின் வருவாய் 9.96 சதவீதம் அதிகரித்து ரூ.6,443.37 கோடியாக உள்ளது. சிகரெட் அல்லாத எஃப்எம்சிஜி வருவாய் ரூ. 4,141.97 கோடியாக இருந்தது, இது தொடர்புடைய காலாண்டில் இருந்து 12.32 சதவீதம் அதிகமாகும்.
ஆதித்யா பிர்லா
ஆதித்யா பிர்லா பேஷன்ஸ் அண்ட் ரீடைல் நிறுவனம் மார்ச் காலாண்டில் 2,283 கோடி ரூபாய் வருவாயும், EBITDA அளவு 58 சதவீத வளர்ச்சியில் 401 கோடி ரூபாயாக உள்ளது. இதற்கிடையில் பாண்டலூன்ஸ் வர்த்தகம் இக்காலாண்டில் 13 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
டிஎல்எப்
இந்தியாவின் முன்னணி கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனமான DLF நிறுவனத்தின் மொத்த லாபம் கடந்த ஆண்டை காட்டிலும் 16 சதவீதம் சரிந்து 405.33 கோடி ரூபாயாக உள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் வருவாய் 1906.59 கோடி ரூபாயில் இருந்து தற்போது 1652.13 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது.
டாக்டர் லால் பாத்லேப்ஸ்
மார்ச் காலாண்டில் டாக்டர் லால் பாத்லேப்ஸ் நிறுவனத்தின் மொத்த லாபம் 26.5 சதவீதம் சரிந்து 61.3 கோடி ரூபாயாக உள்ளது, மொத்த விற்பனை 12.65 சதவீதம் அதிகரித்து 485.5 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மொத்த வருவாய் மார்ச் காலாண்டில் 12.7 சதவீதம் உயர்ந்து 485.5 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ்
பஜாஜ் எலக்ட்ரிக்கல் மார்ச் 2022 உடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் மொத்த நிகர லாபம் 28.73 சதவீதம் சரிந்து ரூ.38.67 கோடியாக உள்ளது. மொத்த வருவாய் 6.02 சதவீதம் அதிகரித்து ரூ.1,334.32 கோடியாக உள்ளது. 2021-22 மார்ச் காலாண்டில் மொத்த செலவுகள் ரூ.1,214.47 கோடியில் இருந்து ரூ. 1,299.61 கோடியாக உயர்ந்துள்ளது.
பார்தி ஏர்டெல்
மார்ச் காலாண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த லாபம் 165 சதவீதம் அதிகரித்து 2008 கோடி ரூபாயாகவும், மொத்த வருவாய் 22 சதவீதம் அதிகரித்து 31500 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
மேலும் இக்காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 1 சதவீதம் அதிகரித்து 360 மில்லியன் ஆக உள்ளது.
Q4 Results: ITC, Aditya Birla Fashion and Retail, Lal PathLabs, bajaj electricals, Airtel
Q4 Results: ITC, Aditya Birla Fashion and Retail, Lal PathLabs, bajaj electricals, Airtel மார்ச் காலாண்டு முடிவுகள்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது..!