சென்னை: ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் விடுதலைக்கு உதவி செய்த, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பேரறிவாளன் தனது குடும்பத்தினருடன் சென்று நன்றி தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பளித்தது. இந்த நிலையில், தனது விடுதலைக்கு பேருதவியாக இருந்த தமிழக அரசுக்கு நன்றி செலுத்தும் விதமாக, சென்னை வந்த பேரறிவாளன், தனது தாய் மற்றும் தந்தையுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் நேரில் சந்தித்தார்.
கோவை செல்ல விமான நிலையம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சென்னை விமான நிலையத்தில் பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்