புதுடில்லி : நேற்று முன்தினம் நடந்த மும்பை பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குனர்கள் கூட்டத்தில், பொது நலப் பிரிவு இயக்குனராக உள்ள எஸ்.எஸ்.முந்த்ராவை, தலைவராக நியமனம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. முந்த்ரா, 40 ஆண்டுகளுக்கு மேலாக வங்கித் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். பேங்க் ஆப் பரோடாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பணியாற்றியவர். ரிசர்வ் வங்கி துணை கவர்னராக மூன்று ஆண்டுகள் பதவி வகித்தவர். மும்பை பங்குச் சந்தையின் தலைவர் விக்ரம்ஜித் சென் பதவிக் காலம் முடிந்ததை அடுத்து, அப்பொறுப்புக்கு முந்த்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடில்லி : நேற்று முன்தினம் நடந்த மும்பை பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குனர்கள் கூட்டத்தில், பொது நலப் பிரிவு இயக்குனராக உள்ள எஸ்.எஸ்.முந்த்ராவை, தலைவராக நியமனம் செய்ய ஒப்புதல்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.