ரஷியாவை விட்டு வெளியேறும் மெக்டோனல்ட்ஸ்- பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்

மாஸ்கோ:
கம்யூனிச நாடுகளின் கூட்டமைப்பான சோவியத் ஒன்றியம் 1990-களில் பிரிந்தபோது ரஷியாவிற்கு மெக்டோனல்ட்ஸ் உணவகம் வந்தது.
இது அமெரிக்க முதலாளித்துவத்தின் அடையாளம் என பேசப்பட்டது.  1990-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி மத்திய மாஸ்கோவில் புஷ்கின் சதுக்கத்தில் இந்த உணவகம் தொடங்கப்பட்டபோது. இதில் விற்கப்படும் பிக் மேக் என்ற பர்க்கரை வாங்குவதற்கு 30,000 பேர் கூடியிருந்தனர்.
30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த இந்த மெக்டோனால்ட்ஸ் உணவகங்கள் தற்போது ரஷியாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மெக்டோனல்ட்ஸ் ரஷியாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
ரஷியாவில் உள்ள மெக்டோனல்ட்சின் 850 உணவகங்கள் உள்ளூர் நிறுவனத்திற்கு விற்கப்படுகிறது. மீதமுள்ள உணவகங்கள் என்ன ஆகும் என்று தெரியவில்லை.
இந்நிலையில் மூடப்படவுள்ள மெக்டோனல்ட்ஸ் உணவகத்தில் விற்கப்படும் பிக் மேக் பக்கரை வாங்க ஏராளமானோர் வரிசையில் காத்துள்ளனர். இதுகுறித்து ரஷிய மக்கள் கூறும்போது, சிலர் 250 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்து பிக் மேக் பர்க்கரை வாங்குவதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.