ரஷ்யாவை பழிக்கு பழி வாங்கும் கனடா! விளாடிமிர் புடினுக்கு தடை.,


ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உட்பட பலரை நாட்டிற்குள் நுழைய தடை விதிக்க கனடா திட்டமிட்டுள்ளது.

உக்ரைன் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் தொடர்ந்து விதிக்கப்பட்டுவரும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அவரது அரசாங்க மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த 1,000 உறுப்பினர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடைசெய்யும் மசோதாவை கனடா செவ்வாயன்று செனட்டில் அறிமுகப்படுத்தியது.

உக்ரைனில் மரியுபோல் நகரத்தில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையை ரஷ்யா கைப்பற்றியதாகத் தெரியவந்த நிலையில், இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஒரு கையில் குழந்தை, மறுகையில் சூட்கேஸ்., விமானத்தில் பயணிகளை மிரளவைத்த தாய்! 

ரஷ்யாவை பழிக்கு பழி வாங்கும் கனடா! விளாடிமிர் புடினுக்கு தடை.,

கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் மார்கோ மென்டிசினோ வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “இந்த தூண்டுதலற்ற ஆக்கிரமிப்புக்கு காரணமானவர்கள் உட்பட புடினின் ஆட்சியின் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் முக்கிய ஆதரவாளர்கள் எங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்வது ரஷ்யாவை நாங்கள் குற்றங்களை பொறுப்பேற்க வைக்கும் பல வழிகளில் ஒன்றாக இருக்கும்” எனறு கூறியுள்ளார்.

உக்ரைன் போரின் தொடக்கத்திலிருந்து, கனடா மற்றும் பிற மேற்கத்திய நட்பு நாடுகளால் ரஷ்யாவிற்கு எதிராக பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. கனடாவும் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பி வருகிறது.

இதையும் படிங்க: அமெரிக்க பள்ளியில் இந்திய வம்சாவளி மாணவர் அனுபவித்த கொடுமை! இணையத்தில் விமர்சனத்தை தூண்டிய வீடியோ 

ரஷ்யாவை பழிக்கு பழி வாங்கும் கனடா! விளாடிமிர் புடினுக்கு தடை.,

இதற்கு பதிலடியாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் மற்றும் 600-க்கும் மேற்பட்ட கனேடியர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய ரஷ்யாவும் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக கனடாவின் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாட்டின் ஜனாதிபதி புடினையே முதுகில் குத்திய ரஷ்யா! உக்ரைன் போரில் திருப்புமுனை உறுதி… முக்கிய தகவல் 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.