அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில், குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படுமென கோவையில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
திருச்சியைச் சேர்ந்த ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
சிபிசிஐடி, சிபிஐ விசாரணை நடத்தியும் இதுவரையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில், நேற்று திருப்பூரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை தொடர்ந்து, கோவையிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.