ரூ. 1 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ள பிகாஸ் (BGauss) D15 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 115 கிமீ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் D15i மற்றும் D15Pro என இரு வகையில் கிடைக்கின்றது.
BGauss D15
D15 மின்சார ஸ்கூட்டரின் வடிவமைப்பு மிகவும் தனித்துவமாக ரெட்ரோ வடிவத்தால் ஈர்க்கப்பட்ட வட்ட வடிவ ஹெட்லேம்ப், சிறிய பாக்ஸி வடிவ முன் ஏப்ரான் மற்றும் நீண்ட வால் பகுதி ஆகியவற்றைப் பெறுகிறது.
டியூபுலர் ஸ்டீல் சேஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள டி15 மாடலில் முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மூன்று-படி அனுசரிப்பு இரட்டை ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 16-இன்ச் அலாய் வீல் மற்றும் டிரம் பிரேக்கிங் உடன் சிபிஎஸ் உடன் சேர்க்கப்பட்டுள்ளது.
மற்ற அம்சங்களைப் பொறுத்தவரை, ஸ்கூட்டரில் அனைத்து LED விளக்குகள், ஸ்மார்ட்போன் இணைப்பு ஆகியவற்றைப் பெறுகிறது. டி15 புரோ மாடலுக்கு பிரத்யேக ஆப் மூலம் தொலைநிலை அசையாமை, ஃப்ரிம்வேர் புதுப்பிப்புகள், ஜியோ ஃபென்சிங், அழைப்பு எச்சரிக்கை, வழிசெலுத்தல் போன்ற வசதிகளை வழங்குகிறது.
பிகாஸ் நிறுவனத்தின் D15 மின்சார பேட்டரி ஸ்கூட்டர் 3.1kW PMSM ஹப் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இதன் டார்க் 110Nm உருவாக்குகிறது. ஈகோ, ஸ்போர்ட் மற்றும் ரிவர்ஸ் என மூன்று மோட் உள்ளன. ஸ்போர்ட் மோரில் பயணிக்கும் போது 7 வினாடிகளில் ஸ்கூட்டர் 0-40 கிமீ வேகத்தில் பயணிக்கும். அதிகபட்சமாக மணிக்கு 60 கிமீ வேகத்தில் செல்லும் என்று BGauss கூறுகிறது. ஈக்கோ மோடில் அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கிமீ ஆக விளங்குகிறது.
BGauss D15 பேட்டரி
BGauss D15 ஸ்கூட்டரில் IP67 மதிப்பிடப்பட்ட, நீக்கும் வகையில் 3.2kWh லித்தியம்-அயன் பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையாக 100 சதவிகிதம் சார்ஜ் செய்ய 5 மணிநேரம் மற்றும் 30 நிமிடங்கள் எடுக்கும். அதேசமயம், 80 சதவிகிதம் சார்ஜ் செய்ய 4 மணிநேரம் ஆகும். கூடுதலாக வேகமான சார்ஜர் கொண்டு பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய எடுக்கும் நேரத்தை 1 மணிநேரம் 30 நிமிடங்கள் போதுமானதாகும் என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இரண்டு வேரியன்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்றால், D15i ஆனது ஒரு லித்தியம் அயன் பேட்டரியைப் பெறுகிறது, D15Pro வேரியன்டில் கூடுதல் வால்வு கொண்டு ஒழுங்குபடுத்தப்பட்ட லெட்-அமிலம் (VRLA) பேட்டரியை பெறுகிறது.
BGauss D15 விலை
D15i – ₹ 1.00 லட்சம்
D15 pro – ₹ 1.15 லட்சம்
(ex-showroom, Delhi post FAME II subsidy)
வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் அல்லது BGauss டீலர்ஷிப்களில் ரூ.500 செலுத்தி ஸ்கூட்டரை முன்பதிவு செய்யலாம். ஜூன் மாதத்தில் டெலிவரிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிறுவனம் ஸ்கூட்டருக்கு 3 ஆண்டுகள்/ 36,000 கிமீ வாரண்டியை வழங்குகிறது.
பிகாஸ் D15 ஆனது ஓகினாவா OKHI-90, ஓலா S1 Pro, ஏதெர் 450X, டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் போன்றவற்றுடன் போட்டியிடும்.