வட கொரியாவில் கொரோனா வைரஸ்: உலகில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில், வட கொரியாவில் மக்கள் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு வருகின்றனர். அங்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக நம்பப்படுகிறது. இதற்கிடையில், புதன்கிழமை, வட கொரியாவில் 2,32,880 பேருக்கு புதியதாக காய்ச்சல் இருப்பது பதிவாகியுள்ளது. 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிம் ஜாங்-உன் அதிகாரிகளை குறிவைத்தார்
வட கொரியாவின் சர்வாதிகாரி கிம் ஜாங்-உன், கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோயின் அதிகரித்து வரும் பரவலைக் கையாள்வதில் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ஏப்ரல் மாத இறுதியில் இருந்து 1.7 மில்லியன் மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் குறைந்தது 6,91,170 பேர் இன்னும் தனிமைப்படுத்தலில் வாழ்கின்றனர். அதேநேரம், இந்த காய்ச்சலுக்கு இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர் என்று வட கொரியாவின் வைரஸ் எதிர்ப்பு தலைமையகம் கூறியுள்ளது.
பெரும்பாலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்
காய்ச்சல் இருப்பவர்களில் பெரும்பாலானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். வடகொரியாவிடம் போதிய பரிசோதனை அமைப்பு இல்லாததால், காய்ச்சல் இருக்கும் நபர்களுக்கு கொரோனா உள்ளதா என்பதை உடனடியாக கண்டறிய முடியவில்லை. வட கொரியாவின் மோசமான சுகாதார அமைப்பு காரணமாக வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு தவறியது. இது தற்போது ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. 26 கோடி மக்கள்தொகை கொண்ட இந்த நாட்டில், பெரும்பாலான மக்கள் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கிம் ஜாங் உன் எச்சரிக்கை: கொரோனா பரவலை குறைக்க மருந்து நிர்வாகம் அவசியம்
தொற்றுநோயைக் கையாளும் முறைகளின் கண்டனம்
வட கொரியாவின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனமான கெஎன்சிஏ-வின் படி, செவ்வாயன்று ஆளும் கொரிய தொழிலாளர் கட்சியின் பொலிட்பீரோ கூட்டத்தில் உலகளாவிய தொற்றுநோயை கையாள்வதில் அதிகாரிகள் காட்டும் திறனை கிம் ஜாங்-உன் கண்டித்தார். நெருக்கடியை கையாள்வதில் அலட்சியம் காட்டுவதாகவும், அதிகாரிகளின் கவனக்குறைவான அணுகுமுறையே தற்போதைய நிலைக்கு காரணம் என்றும் அவர் கூறினார்.
கடந்த வாரம் முதல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது
ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு பெற்ற ‘கோவாக்ஸ்’ கொரோனா தடுப்பூசி விநியோகத் திட்டத்தின் உதவியை நாடுவதற்கான வாய்ப்பையும் வட கொரியா நிராகரித்தது. கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோயாக பரவத் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வியாழக்கிழமை தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியை வட கொரியா உறுதிப்படுத்தியது.
கொரிய மக்கள் இராணுவம் திங்களன்று பியாங்யாங்கில் உள்ள மருந்தகங்களுக்கு மருந்துகளை அனுப்புவதற்கு உதவுவதற்காக அதன் மருத்துவ பிரிவுகளில் இருந்து அதிகாரிகள் மற்றும் துணை அதிகாரிகளை நியமித்தது என்று வட கொரியாவின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் செவ்வாயன்று தெரிவித்தது. வைரஸ் நெருக்கடியை சமாளிக்க இது 24 மணி நேரமும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இந்தியாவைக் குறை கூறுவதால் பிரச்சனை தீராது…ஜி-7 நாடுகளுக்கு கண்டனம் தெரிவித்த சீனா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR