தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள நடிகர் விஜய்க்கு தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர்ராவ் வெள்ளி வீணை ஒன்றை பரிசளித்தார்.
நடிகர் விஜய்யின் 66 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவினை நடிகர் விஜய் புதன்கிழமை மரியாதை நிமித்தமாக சென்று சந்தித்தார்.
தெலுங்கானா மாநில முதல்வருக்கு விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். பதிலுக்கு, சந்திர சேகர ராவும் நடிகர் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றதோடு, நினைவு பரிசாக வெள்ளி வீணை ஒன்றை வழங்கி கவுரவித்தார்
தெலுங்கானா முதல்வரை சந்திக்க சென்ற நடிகர் விஜய்க்கு அங்கிருந்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தற்போது இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே திருமண நிகழ்வு ஒன்றில் தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து விஜய் கைகுலுக்கினார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விஜய்யின் வீட்டிற்கே வந்து சந்தித்து பேசியது குறிப்பிடதக்கது.