மதுரையில் வீட்டுமனை பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த சுகுமாரன் வீட்டு மனை பட்டா மாற்றுவதற்காக, பழங்காநத்தம் வி.ஏ.ஓ அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
அங்கு பணியில் இருந்த சர்வேயர் பாலமுருகன் என்பவர் 5000 ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில், சுகுமாரன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகாரளித்துள்ளார்.
அவர்களது ஆலோசனையின் படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, சர்வேயர் பாலமுருகனிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த போலீசார் பாலமுருகனை மடக்கி பிடித்தனர்.