வேட்டைக்கு கிளம்பிய டாடா.. ஒரு கை பார்த்துவிட முடிவு..!

இந்தியாவின் 3 பெரிய வர்த்தகக் குழுமங்களும் தற்போது FMCG பிரிவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் தீவிரமாக இறங்கியுள்ளது.

இதற்காகப் பல பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்வது மட்டும் அல்லாமல் இத்துறையில் முன்னோடியாக இருக்கும் பல முன்னணி நிறுவனங்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளனர்.

இந்நிலையில் அதானி குழுமம் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் -க்குப் போட்டியாகத் தற்போது டாடா குழுமம் களத்தில் குதித்துள்ளது.

ரத்தன் டாடா பெயரில் பேஸ்புக்கில் மோசடி..!

அதானி, ரிலையன்ஸ், டாடா

அதானி, ரிலையன்ஸ், டாடா

லாக்டவுனுக்குப் பின்பு அதானி, ரிலையன்ஸ், டாடா குழுமங்கள் ரீடைல் துறையிலும், ஆன்லைன் வர்த்தகப் பிரிவிலும் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருகிறது. இதற்கிடையில் தற்போது 3 நிறுவனங்களும் உணவு பொருட்கள் விற்பனை பிரிவில் அதிகப்படியான முதலீடு செய்யத் தயாராகியுள்ளது.

அதானி குழுமம்

அதானி குழுமம்

சமீபத்தில் அதானி குழுமம் சமையல் எண்ணெய் வர்த்தகத்தைத் தாண்டி கோஹினூர் அரிசி பிராண்ட் மொத்தமாகக் கைப்பற்றி அரிசி விற்பனை சந்தை கைப்பற்ற மாநில அளவில் சிறு பிராண்டுகளை அடுத்தடுத்து வாங்க முடிவு செய்துள்ளது அதானி குழுமம்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இதைப் பார்த்து ஷாக் ஆன முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 6.5 பில்லியன் டாலரில் 12க்கும் அதிகமான சிறு மற்றும் நடுத்தர FMCG பிராண்டு நிறுவனங்களை வாங்க முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியானது.

டாடா கன்ஸ்யூமர்

டாடா கன்ஸ்யூமர்

இந்த நிலையில் அதானி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்திற்குப் போட்டியாக டாடா குழுமத்தின் முக்கியக் கிளை நிறுவனமான டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் நுகர்வோர் பிரிவில் 5க்கும் அதிகமான நிறுவனத்தைக் கைப்பற்றும் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது.

செர்ரி பழம்

செர்ரி பழம்

அதானி, ரிலையன்ஸ், டாடா குழுமங்கள் ஏற்கனவே இந்தியா முழுவதும் பல்வேறு வர்த்தகத்தைச் செய்து வரும் நிலையில் டிஜிட்டல் வர்த்தகத் தளத்தையும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்துள்ளது. இந்த நிலையில் ரீடைல் துறையில் இறங்குவது என்போது கேக் மீது வைக்கப்படும் செர்ரி பழம் போல் ஆகும்.

 FMCG துறை

FMCG துறை

FMCG துறையில் அதானி, ரிலையன்ஸ், டாடா குழுமங்களின் வருகை ஏற்கனவே இத்துறையில் இருக்கும் நெஸ்லே, ஐடிசி, யூனிலீவர் போன்ற முன்னணி நிறுவனங்களுக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கும்.

 MSME நிறுவனங்கள்

MSME நிறுவனங்கள்

இதுமட்டும் அல்லாமல் இத்துறையில் இயங்கி வரும் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் இனி வரும் காலகட்டத்தில் பெரும் நிறுவனங்களின் ஆதிக்கத்தைச் சமாலிக்க முடியாமல் இயங்க முடியாத நிலை உருவாகும். இதனால் MSME பிரிவில் இருக்கும் நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tata into acquisition Mode; buy up to five brands in consumer goods sector

Tata into acquisition Mode; buy up to five brands in consumer goods sector வேட்டைக்குக் கிளம்பிய டாடா.. ஒரு கை பார்த்துவிட முடிவு..!

Story first published: Wednesday, May 18, 2022, 10:43 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.