Tamilnadu Ministers Conversation In English: தமிழகத்தில் உள்ள 90 சதவீதம் அமைச்சர்களுக்கு ஆங்கிலமும் தெரியாது விமானமும் ஏறத்தெரியாது என்று விமர்சனம் செய்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக அமைச்சர்கள் ஆங்கிலத்தில் உரையாடும் வீடியோ கட்சியை தற்போது திமுக வெளியிட்டுள்ளது.
சென்னை மைலாப்பூரில் நடைபெற்ற திராவிட மாயை என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில்,
திராவிடம் என்பது குழப்பம் நிறைந்த ஒன்று. திமுக தொடங்கப்பட்டதே குழப்பத்தில் தான். தேசிய குற்ற ஆவண புள்ளி விவரத்தின்படி தமிழகத்தில் தீண்டாமையில் திருவாரூர் மாவட்டம்தான் முதலிடம். தமிழகத்தில் பதிவான 600 தீண்டாமை வழக்குகளில், 156 வழக்குகள் திருவாரூரில் பதிவானவை.
திமுகவில் 260 நபர்கள் மேல்மட்டத்தில் உள்ளனர். அவர்களை வீழ்த்திவிட்டால் திமுகவை எளிதில் வீழ்த்திவிடலாம். கோடை காலத்தில் மழை வந்தாலும் அதற்கு திராவிட மாடல் தான் காரணம் என்று சொல்வார்கள். திமுக அமைச்சர்கள் 90 சதவீதம் பேருக்கு ஆங்கிலம் தெரியாது. விமானம் ஏறத்தெரியாது.
அதனால் தான் விமானம் ஏறி டெல்லி சென்று தமிழகத்திற்கு ஒரு பைசா கூட நிதி பெற்று தர இவர்களால் முடியவில்லை. 2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக வென்று ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளார். இதில் அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று இவர் கூறியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏனப்பா இது 🤔 https://t.co/VkvpRcveQk
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) May 17, 2022
தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் துரைமுருகன், அன்பில் மகேஷ், மனோ தங்கராஜ், சிவசங்கர் ஆகியோர் ஆங்கிலத்தில் உரையாடுவது போன்ற வீடியோவை திமுக வெளியிட்டுள்ளது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“