150 பேரை பணிநீக்கம் செய்த நெட்பிளிக்ஸ்.. அதிர்ச்சியில் இருக்கும் ஊழியர்கள்.. இதுதான் காரணம்..!!

சர்வதேச அளவில் பிரபலமான ஓடிடி தளங்களில் ஒன்று நெட்பிளிக்ஸ். இதில் மக்களுக்கு பிடித்தமான வெப் சீரிஸ்கள், திரைப்படங்கள், கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகள், குறிப்பாக புதிய திரைப்படங்கள் எனபவும் ஒளிப்பரப்படுவதால், மக்கள் மிகவும் விரும்பும் தளங்களில் ஒன்றாக உள்ளது.

இதற்கிடையில் தற்போது சுமார் 150 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

3 மாத குறைந்த விலையில் இருந்து தங்கம் விலை ஏற்றம்.. நல்ல வாய்ப்பு தான்..!

இது அதன் மொத்த ஊழியர்கள் தொகுப்பில் 2 சதவீதம் எனவும் கூறப்படுகின்றது.

பணி நீக்கம்

பணி நீக்கம்

இந்த பணி நீக்கத்தில் பெரும்பகுதி அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிகின்றது. நெட்பிளிக்ஸ்-ன் இந்த பணி நீக்க நடவடிக்கையானது அதன் அணிமேஷன் பிரிவில் 70 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது தவிர சமூக வலைதள மற்றும் பதிவேற்றம் செய்யும் ஊழியர்கள் என பலரும் இந்த லிஸ்டில் அடங்குவார்கள் என கூறப்படுகின்றது.

செலவு குறைப்பு நடவடிக்கை

செலவு குறைப்பு நடவடிக்கை

இதற்கிடையில் இந்த பணி நீக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நிறுவனம், வருவாய் விகிதமானது மெதுவாக சரிவினைக் கண்டு வருகின்றது. இதனால் செலவினைக் குறைக்கும் நிலைக்கு நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. இதனால் 150 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே பல முழு நேர பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை பணி நீக்கம் செய்தது. இந்த நிலையில் இந்த புதிய சுற்று பணி நீக்க அறிவிப்பானது வந்துள்ளது.

சந்தாதாரர்கள் இழப்பு
 

சந்தாதாரர்கள் இழப்பு

கடந்த மாதம் நெட்பிளிக்ஸ் நிறுவனம் முதல் காலாண்டில் 2,00,000 சந்தாதாரர்களை இழந்துள்ளதாகவும். இது அடுத்து வரும் காலாண்டிலும் கூடுதலாக 2 மில்லியன் சந்தாதார்களை இழக்கலாம் என்றும் மதிப்பிட்டுள்ளது. ஆக இது வருவாய் வளர்ச்சிக்கு சரிவுக்கு காரணமாக அமையலாம் என்ற நிலையில் நெட்பிளிக்ஸ் இப்படி ஒரு அறிவிப்பினை கொடுத்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 சர்ச்சைகள்

சர்ச்சைகள்

இதற்கிடையில் நெட்பிளிக்ஸ்-ல் ஓளிப்பரப்படும் டெவ் சேப்பலின் என்ற நிகழ்ச்சிக்கு பரவலான எதிர்ப்புகள் இருந்து வருகின்றது. குறிப்பாக ஊழியர்கள் மத்தியிலேயே இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது. இந்த நிகழ்ச்சியானது மூன்றாம் பாலினத்தவர்களை கேலி செய்யும் விதமாக இருப்பதால், தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 தொடர்ந்து ஓளிப்பரப்பாகும்

தொடர்ந்து ஓளிப்பரப்பாகும்

இதற்கிடையில் பெரும் அதிருப்தி அடைந்த நெட்பிளிக்ஸ் நிறுவனம், எதிர்ப்புகள் கிளம்பியிருந்தாலும் அது தொடர்ந்து ஓளிப்பரப்படும் என்றும் அறிவித்தது. இந்த நிலையில் தான் ஊழியர்களுக்கும் கடும் கட்டுபாடுகளை விதித்துள்ளது. அதோடு எந்த நிகழ்ச்சி யாருக்கு வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் வசதி வாடிக்கையாளர்களுக்கு உண்டு.

கொடுத்த பணியை செய்யுங்கள்

கொடுத்த பணியை செய்யுங்கள்

மேலும் எங்களுடன் இணைந்து பணியாற்றும் கலைஞர்களின் கலை ஆற்றலை ஆதரிக்கும் நிலைபாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆக ஊழியர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பணியை செய்ய வேண்டும். அதில் உங்களுக்கு விருப்பமில்லை எனில் நீங்கள் தாரளமாக வெளியேறிக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.மொத்தத்தில் சந்தாதாரர்கள் இழப்புக்கு மத்தியில், பல்வேறு பிரச்சனைகளையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் எதிர்கொண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Netflix lay off around 150 employees amid subscriber loss

Netflix has laid off about 150 employees, which is about 2 percent of its total workforce.

Story first published: Wednesday, May 18, 2022, 10:46 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.