Soft Chappathi Recipe In Tamil: சப்பாத்தி, இன்று பலராலும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாக உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இந்த அற்புத உணவில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளடங்கியுள்ளன. மேலும், உடல் நலன் சார்ந்த பல பிரச்னைகளின் போதும் பரிந்துரைக்கப்படும் ஒரு உணவாகவும் இவை உள்ளன.
பொதுவாக நாம் சப்பாத்தி தாயார் செய்யும் போது, அவை சாஃப்டாக வர வேண்டும் என எதிர்பார்ப்பது உண்டு. ஆனால் சில சமயங்களில் அவை நாம் எதிர்பார்த்தது போல சாஃப்டாக வருவதில்லை. அவை அப்படி சாஃப்டாக வர சமையல் செயல்முறை சரியாக இருக்க வேண்டும். இதற்காகவே உங்களுக்கு சில டிப்ஸ்களை இங்கு வழங்கியுள்ளோம்.
முதலில் தேவையான அளவிற்கு மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின்னர், சப்பாத்தி மாவுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அதனை நன்கு கையால் மிக்ஸ் செய்ய வேண்டும். தண்ணீர கொஞ்சமா கொஞ்சமா ஊற்றி மாவை எந்தளவு முடியுமா கையால் பிசைந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு சப்பாத்தி சாஃப்ட்டாக வரும்
தொடர்ந்து, வெடிப்பு வராத அளவு மாவை உருண்டையாக பிடிக்க வேண்டும். அதன் மீது லைட்டா சப்பாத்தி மாவை தடவி, சப்பாத்தி சூடுவதற்காக உருட்ட வேண்டும். நீங்கள் திருப்பி திருப்பி போட்டு சப்பாத்தி மாவை கட்டையால் தெய்க்கும் போது, சப்பாத்தி மாவு அழகாக ரவுண்ட் ஷேப்பில் வந்துவிடும். இதே முறையில், எல்லா சப்பாத்தியையும் ரவுண்டாக தேய்க்க வைத்துக்கொள்ள வேண்டும்.
இதையடுத்து, கல்லை அல்லது பேன் சூடு செய்து சப்பாத்தியை அதில் போட வேண்டும். பேன் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். சப்பாத்தியில் பப்பூள்ஸ் வந்ததும், அதனை மாற்றிப்போட வேண்டும். சப்பாத்தியில் லைட்டாக 4 ட்ராப் எண்ணெய் ஊற்றி, அதனை சப்பாத்தி முழுவதும் தேய்த்துக்கொள்ள வேண்டும்.
இப்படி செய்யும் போது சப்பாத்தி பொன்னிறமாக உப்பி வரும் சமயத்தில், அதனை மீண்டும் ஒருமுறை திருப்பி போட்டுவிட்டு உடனே எடுத்துவிட வேண்டும். எடுக்க தவறினால், சப்பாத்தி வறட்டி மாதிரிஆகிடும்.
இப்போது நீங்கள் எதிர்பாத்த சாஃப்ட் சப்பாத்தி தயார். இந்த முறையில் சப்பாத்தி செய்தால், 2 நாள்கள் வரை அதன் சாஃப்ட்நஸ் மெயின்டேயின் செய்யலாம்.