விவசாய பொருட்கள் உற்பத்தியில் உலகின் இரண்டாம் மிகப் பெரிய நாடாக இந்தியா உள்ளது. விவசாயம் தான் இந்தியாவின் முதுகெலும்பு எனச் சொல்லப்படுகிறது.
இந்தியாவின் வானிலை, புவியியல் மற்றும் மண்ணின் அம்சங்கள் வேறுபட்டவை. இதன் விளைவாக, நாட்டில் பல்வேறு வகையான பயிர்கள் விளைகின்றன. இந்தியப் பயிர்களில் அரிசி, கோதுமை மற்றும் பருப்பு போன்ற உணவு தானியங்கள் அடங்கும். எனவே இந்தியாவில் அதிகம் உற்பத்தி தானியங்கள் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
அரிசி
இந்தியாவில் அதிகம் விளையும் தானியமாக நெல் உள்ளது. 2021, செப்டம்பர் மாதம் வரையில் இந்தியாவில் 1,222.7 டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நாட்டின் தானிய உற்பத்தியில் இது 39.6 சதவீதம்.
பஞ்சாப், மேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, ஹரியான, ஓரிசா, சத்தீஷ்கர், பீகார், மகாராஷ்டிரா மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகம் விளைகிறது.
கோதுமை
இந்தியாவில் இரண்டாவதாக அதிகளவில் விளையும் தானியமாகக் கோதுமை உள்ளது. நாட்டின் மொத்த தானிய உற்பத்தியில் கோதுமையின் பங்கு 35.5 சதவீதமாக உள்ளது.
நாட்டின் மொத்த கோதுமை உற்பத்தியில் 35 சதவீதம் உத்திரப் பிரதேசத்திலிருந்து விளைகிறது தொடர்ந்து ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கோதுமை அதிகம் விளைகிறது.
சிறுதானியங்கள்
தானியங்கள் உற்பத்தியில் பார்லி, சோளம் மற்றும் ராகி போன்ற தானியங்கள் 16.6 சதவீத பங்கை வகிக்கின்றன. நாட்டின் ஒட்டுமொத்த சிறுதானிய உற்பத்தியில் 52 சதவீதம் மகாராஷ்டிராவிலிருந்தும், தொடர்ந்து தமிழ்நாடு ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்களிலும் விளைகின்றன.
பருப்பு
நாட்டின் ஒட்டுமொத்த தானிய உற்பத்தியில் பருப்பு 8.3 சதவீதமாக உள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்திர பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பருப்பு அதிகமாக விளைகிறது.
ஜிடிபி
இந்தியாவின் ஒட்டுமொத்த பணியாளர்களில் 40 சதவீதத்தினர் விவசாய துறையில் இருக்கின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த அஜிடிபியில் விவசாயத் துறையின் பங்கு 20 சதவீதமாக உள்ளது.
டீ
உலகின் 80 சதவீத டீ இலை உற்பத்தி இந்தியாவில் தான் நடைபெறுகிறது. ஆண்டுக்கு 1,300 மில்லியன் கிலோவுக்கும் அதிகமாக இந்தியாவில் டீ உற்பத்தி செய்யப்படுகிறது.
காபி
தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகளவில் காபி உற்பத்தி செய்யப்படுகிறது.
Which Are The Top Food Grains Produced In India?
Which Are The Top Food Grains Produced In India? | 2021-2022 நிதியாண்டில் இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் தானியங்கள் இவைதான்!