இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் சில பிரிவில் மட்டும் புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் நிலைமை கடுமையாகியுள்ளது.
அந்த வகையில் Edtech எனபடும் கல்வி துறையில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய வர்த்தகம் மற்றும் மதிப்பீடு வித்தியாசம் இருக்கும் காரணத்தால் புதிய முதலீடுகளைச் செய்ய முதலீட்டாளர்கள் தயங்கி வருகின்றனர்.
இத்தகைய பிரச்சனையில் தான் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் வேதாந்து நிறுவனம் சிக்கியுள்ளது.
இந்தியாவில் பணிபுரிய சிறந்த நிறுவனங்கள் என்னென்ன.. சென்னையில் இருக்கா?
வேதாந்து நிறுவனம்
வேதாந்து நிறுவனம் 2014ஆம் ஆண்டு Edtech பிரிவில் இயங்கி வருகிறது. லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வுகளுக்குப் பின்பு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால், ஆன்லைன் கல்வி சேவைகளுக்கான டிமாண்ட் குறைந்துள்ளதாலும் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்தது. இதன் எதிரொலியாக வேதாந்து நிறுவனம் கடுமையான நிதிநெருக்கடி உருவானது.
பணிநீக்கம்
இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க முடியாத வேதாந்து நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு 200 ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் முழு நேர ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. இந்நிறுவன ஊழியர்கள் மத்தியிலும் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த Edtech துறை ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
424 ஊழியர்கள்
இந்நிலையில் யூனிகார்ன் அந்தஸ்தை பெற்ற வேதாந்து வெளியிட்ட அறிக்கையில் இதுவரை 424 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாகவும். இதன் மூலம் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 7 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளது என நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
வம்சி கிருஷ்ணா
வேதாந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான வம்சி கிருஷ்ணா இந்த முடிவுக்கான காரணத்தை விளக்கினார், தற்போது சர்வதேச சூழ்நிலைகள் மிகவும் கடினமாக உள்ளது. ஐரோப்பாவில் போர், வரவிருக்கும் மந்தநிலை அச்சங்கள் மற்றும் மத்திய வங்கி வட்டி உயர்வுகள் ஆகியவை பணவீக்க அழுத்தங்களுக்கு வழிவகுத்தது, உலகளவில் மற்றும் இந்தியாவிலும் பங்குகளில் பெரும் திருத்தம் ஏற்பட்டுள்ளது.
9 மடங்கு வளர்ச்சி
இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் காலாண்டுகளுக்கு மூலதனம் பற்றாக்குறை இருக்கும். லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வுகளுக்குப் பின்பு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் ஆன்லைன் கல்வியின் தேவையும் குறைந்துள்ளது. இதேபோல் கடந்த 2 வருடத்தில் வேதாந்து நிறுவனத்தின் 9 மடங்கு வளர்ச்சி தற்போது நார்மலைஸ் ஆகிறது என வம்சி கிருஷ்ணா கூறியுள்ளார்.
பிற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
இதேபோல் 2022ல் Unacademy குரூப் 1000 ஊழியர்களையும், ட்ரெல் 300 ஊழியர்களையும், லிடோ 200 ஊழியர்களையும், furlenco 180 ஊழியர்களையும், மீஷோ 150 ஊழியர்களையும், ஓகேகிரெடிட் 35 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளது.
vedantu: lay off 424 employees amid cash crunch, business fall
vedantu: lay off 424 employees amid cash crunch, business fall 424 ஊழியர்களைப் பணிநீக்கம்.. அதிர்ச்சி கொடுத்த பெங்களூர் ஸ்டார்ட்அப் நிறுவனம்..!