நேற்று 75-வது கான் திரைப்பட விழா ஆரவாரமாகத் தொடங்கியிருக்கிறது. மே 25 வரை நடைபெறவிருக்கும் இந்தத் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள இந்திய நட்சத்திரங்கள் பலரும் பிரான்ஸுக்கு சென்றிருக்கின்றனர்.
தீபிகா படுகோன் இந்த வருடம் நடுவர் குழுவில் இடம்பெற்றிருக்கிறார்.
தமன்னா கான் திரைப்பட விழாவில் பங்கேற்கிறார்.
ரஹ்மான் இயக்குநராக களமிறங்கி இயக்கிய முதல் படம் Le Musk திரையிடப்பட உள்ளது.
மாதவன் முதன் முறையாக இயக்கிய Rocketry: The Nambi Effect படமும் கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது.
விக்ரம் ஆடியோ லாஞ்ச் முடிந்த கையோடு கமல் பயணமானது பிரான்ஸுக்கு தான்.
பூஜா ஹெக்டே இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ள சென்றிருக்கிறார்.
பா.ரஞ்சித் இயக்கவுள்ள ‘வேட்டுவம்’ படத்தின் போஸ்டர் கான் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்ட உள்ளது.
இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பாலிவுட் நடிகை வாணி திரிபாதி உடன் பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக்.
தமிழில் உருவாகியுள்ள The Legend படத்தின் போஸ்டர் கேன்ஸ் விழாவில் வெளியிடப்பட இருக்கிறது. அந்தப் படத்தில் நடித்திருந்த ஊர்வசி (Urvashi Rautela) கான் விழாவில் கலந்து கொள்கிறார்.
பாலிவுட் நடிகை Helly Shah லொரியல் பாரிஸ் அழகுசாதன நிறுவனத்தின் சார்பில் கேன்ஸ் விழாவில் பங்கேற்க பிரான்ஸ் சென்றிருக்கிறார்.
நடிகர் பார்த்திபனின் `இரவின் நிழல்’ படம் கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. பார்த்திபன் அவ்விழாவில் கலந்துகொள்கிறார்.