EPFO Alert Tamil News: வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருக்கும் மக்கள் கவனத்திற்கு, நீங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை மோசடி செய்பவர்கள் திருட பல வழிகளை கண்டுபிடித்துள்ளார்கள். அவர்கள் உங்கள் பிஎஃப் கணக்கின் விவரங்களைக் கேட்பதன் மூலம் ஆன்லைன் மோசடிகள் முதல் உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஹேக் செய்வது வரை அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் ஆன்லைன் மோசடி அச்சுறுத்தல் இருந்து வருகிறது. அதுபோன்ற ஆன்லைன் மோசடி அச்சுறுத்தலை நீங்கள் தவிர்க்க உங்களுக்கு சில குறிப்புகளை இங்கு வழங்கியுள்ளோம்.
- உங்கள் PAN, UAN வங்கிக் கணக்கு அல்லது OTP ஆகியவற்றை ஃபோன் அல்லது சமூக ஊடகங்களில் ஒருபோதும் கொடுக்காதீர்கள்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமூக ஊடகங்கள் அல்லது ஃபோன் மூலம் கணக்கு வைத்திருப்பவர்களிடம் இந்த விவரங்களைக் கேட்பதில்லை. இந்த விவரங்களைக் கேட்டு உங்களுக்கு அழைப்பு வந்தால், அது மோசடி அழைப்பு என தெரிந்துகொள்ளவும். - Whatsapp அல்லது வேறு ஏதேனும் சேவை மூலம் EPFO க்கு பணம் டெபாசிட் செய்யும்படி கேட்கும் தெரியாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளுக்கு ஒருபோதும் பதிலளிக்க வேண்டாம்.
ஒரு சேவைக்காக எந்த பணத்தையும் டெபாசிட் செய்யும்படி நிறுவனம் உங்களை ஒருபோதும் கேட்காது. நீங்கள் EPFO க்கு பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று அறிவிக்கும் செய்திகள் மற்றும் அழைப்புகள் குறித்து ஜாக்கிரதை.
- EPFO உறுப்பினர்கள் எனக் கூறிக்கொண்டு, பணம் கேட்கும் நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளைப் புகாரளிக்கத் தயங்காதீர்கள்.
EPFO உறுப்பினர்கள் என்று கூறிக்கொண்டு உங்களிடம் பணம் கேட்டால், உங்கள் புகாரை அதிகாரிகளை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம். இந்த அழைப்புகள் அல்லது செய்திகளுக்கு பதிலளிக்க வேண்டாம் மற்றும் காவல்துறையிடம் புகார் அளிக்கவும்.
- உங்கள் ஆவணங்களான பான், ஆதார் போன்றவற்றை பாதுகாப்பின்றி வைக்காதீர்கள்.
உங்கள் அனைத்து ஆவணங்களையும் டிஜிலாக்கரில் பாதுகாக்க மறக்காதீர்கள். இணையதளத்தில் ஒரு கணக்கை உருவாக்கி, உங்கள் ஆவணங்கள் ஹேக்கர்களிடமிருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய அவற்றைச் சமர்ப்பிக்கவும்.
உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க முயற்சிக்கும்போது ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், நீங்கள் EPFO இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம் மற்றும் அதைப் பற்றி அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil