Phonepe போட்ட திட்டம்.. கூகுள், அமேசான், பேடிஎம்-க்கு நெருக்கடி..!

அமெரிக்காவின் மிகப்பெரிய ரீடைல் நிறுவனமான வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் பிளிப்கார்ட்-ஐ கைப்பற்றியதன் மூலம் அதன் வர்த்தகத்தை முறைமுகமாகச் செய்து வருகிறது.

இந்தியாவில் வால்மார்ட் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டுள்ளது, இதற்கு முக்கிய காரணம் அதன் சக போட்டி நிறுவனமான அமேசான்.

மார்ச் காலாண்டு முடிவுகள்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது..!

அமேசான் Vs வால்மார்ட்

அமேசான் Vs வால்மார்ட்

அமெரிக்காவை போலேவே இந்தியாவிலும் ரீடைல் சந்தையில் அமேசான், வால்மார்ட் கடுமையாகப் போட்டிப்போட்டு வருகிறது. இதற்கிடையில் இந்தியா டிஜிட்டல் வர்த்தகச் சந்தையில் ரிலையன்ஸ், டாடா போன்ற நிறுவனங்களும் வந்துள்ள நிலையில் போட்டி அதிகமாகியுள்ளது.

போன்பே

போன்பே

இதைச் சமாளிக்கும் விதமாகவும் புதிய வர்த்தகம், வாடிக்கையாளர்களைக் கைப்பற்றும் விதமாக வால்மார்ட் அதனுடைய பேமெண்ட் சேவை நிறுவனமான போன்பே (பிளிப்கார்ட் நிறுவனத்தின் கிளை நிறுவனம்) 75 மில்லியன் டாலருக்கு இரண்டு வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.

75 மில்லியன் டாலர்

75 மில்லியன் டாலர்

போன்பே நிறுவனம் வெல்த்டெஸ்க் என்னும் நிறுவனத்தை 50 மில்லியன் டாலருக்கும், OpenQ என்னும் நிறுவனத்தைக் கிட்டத்தட்ட 25 மில்லியன் டாலருக்கு கைப்பற்ற ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

மும்பை
 

மும்பை

போன்பே நிறுவனம் WealthDesk மற்றும் OpenQ ஐ வாங்குவதை உறுதி அளித்தாலும் நிதி விவரங்களை வெளியிடவில்லை, இதனால் இவ்விரு நிறுவனத்தையும் 75 மில்லியன் டாலருக்குக் கைப்பற்றியிருக்கக் கூடும் எனச் சந்தை கணிப்புகள் கூறுகிறது. WealthDesk மற்றும் OpenQ ஆகிய இரு நிறுவனமும் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது.

இணைப்பு

இணைப்பு

இரு நிறுவனங்களின் கைப்பற்றலுக்குப் பின்பு WealthDesk இன் நிறுவனர் மற்றும் முழுக் குழுவும் PhonePe குழுவின் ஒரு பகுதியாகச் செயல்படும், மேலும் இரண்டு நிறுவனமும் தனித்தனியாகத் தான் இயக்கும். இதேபோல் போன்பே தளத்தில் வெல்த் எகோசிஸ்டம் உருவாக்குவதில் OpenQ முக்கியக் கருவியாக இருக்கும் எனப் போன்பே தெரிவித்துள்ளது.

சேவைகள்

சேவைகள்

WealthDesk, 2016 இல் நிறுவப்பட்டது இந்நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்குப் பங்குகளில் முதலீடு செய்யவும் ETF-களில் முதலீடு செய்யவும் அனுமதிக்கிறது. OpenQ சில்லறை மற்றும் நிறுவன முதலீட்டாளர்களுக்கு டிரேடிங் பேஸ்கட் மற்றும் முதலீட்டுப் பகுப்பாய்வு சேவைகளையும் வழங்குகிறது.

கூகுள், அமேசான், பேடிஎம்

கூகுள், அமேசான், பேடிஎம்

இவ்விரு நிறுவன கைப்பற்றில் மூலம் போன்பே நிறுவனம் இந்திய பேமெண்ட் சந்தையில் கூகுள், அமேசான், பேடிஎம் ஆகிய நிறுவனங்களுடன் போட்டிப்போடவும் வர்த்தகம், வாடிக்கையாளர்களைப் பகிரவும் முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Mumbai based WealthDesk and OpenQ acquired by Phonepe to compete with Google, Amazon, paytm

Mumbai based WealthDesk and OpenQ acquired by Phonepe to compete with Google, Amazon, paytm / Phonepe 75 மில்லியன் டாலருக்கு இரண்டு வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது. கூகுள், அமேசான், பேடிஎம்-க்கு நெருக்கடி..!

Story first published: Wednesday, May 18, 2022, 22:02 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.