Twitter Exposed: ட்விட்டரை
எலான் மஸ்க்
வாங்கியதில் இருந்து குழப்பங்களும் தொற்றிக் கொண்டது. புதிய தலைமையை அவ்வளவு மகிழ்ச்சியுடன்
ட்விட்டர்
அலுவலர்கள் வரவேற்றகவில்லை. மாறி மாறி அடுக்கடுக்கான புகார்கள் மட்டுமே மிஞ்சியது.
இதனிடையில், சுதந்திரமான பேச்சு, ஸ்பேம் போட்டுகள் அழிப்பு என எலான் மஸ்க் ட்விட்டருக்கு வெளிப்படைத் தன்மையை கொண்டுவரப்போவதாக பல முடிவுகளை எடுத்து, அதனை தனது ட்வீட்டுகள் வாயிலாக உலகறியவும் செய்தார்.
WhatsApp Groups: இனி வாட்ஸ்அப் குழுவில் இருந்து ரகசியமாக வெளியேறலாம்!
குழப்பத்தில் ட்விட்டர்
இந்நிலையில், ட்விட்டரில் 20% விழுக்காடு வரை ஸ்பேம் கணக்குகள் இயங்கி வருவதாகவும், தலைமை செயல் அலுவலர் அளித்த ஒப்பந்த கோப்புகளில் அது 5% விழுக்காடு தான் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறி, ட்விட்டர் வாங்கும் ஒப்பந்தத்திற்கு இடைக்கால தடையை போட்டார் எலான் மஸ்க்.
உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பத்தில் தீவிரம் குறையும் முன், தமிழ்நாட்டைச் சேர்ந்த ட்விட்டர் அலுவலர் ஒருவர், மறைமுக பத்திரிக்கையாளரிடம், தனது நிறுவனம் குறித்து பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்துள்ளது.
மறைமுகமாக வைக்கப்பட்டிருந்த கேமராவில் இவர் பேசியது அனைத்து படம்பிடிக்கப்பட்டுள்ளது. அதில், ட்விட்டர் என்றுமே சுதந்திரமான பேச்சை விரும்பியதில்லை; அவர்கள் விரும்பப்போவதும் இல்லை என பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Twitter Deal: வெடிக்கும் சர்ச்சை! ஆதாரத்தை கோரும் எலான் மஸ்க்!
வைரலான வீடியோ
பத்திரிகையாளர் ஒருவர் மறைமுகமாக கேமராவை வைத்து இந்த வீடியோவை படம்பிடித்துள்ளார். இவர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் ட்விட்டரின் மூத்த பொறியாளர் சிரு முருகேசன் பதிலளித்துள்ளார். பத்திரிகையாளரின் கேள்விகளுக்கு முருகேசன் கூறிய பதில்களை விரிவாகப் பார்போம்.
“ட்விட்டர் நிறுவனத்திற்கு சுதந்திரமான பேச்சில் நம்பிக்கை இல்லை. எலான் மஸ்க் பேச்சு சுதந்திரத்தை நம்புகிறார். அவர் ஒரு முதலாளி. நாங்கள் உண்மையில் சோஷியலிஸ்ட் போலவே இருக்கிறோம். ட்விட்டர் எங்களை அப்படி மாற்றியிருக்கிறது.
நாம் அனைவரும் ஏமாற்றப்படுகிறோம். சித்தாந்த ரீதியாக, இது அர்த்தமற்றது. ஏனென்றால் நாங்கள் உண்மையில் சோஷியலிசத்துக்கு எதிரானவற்றை மட்டுமே தணிக்கை செய்கிறோம். இதனை பொறுத்துக்கொள்ள என் மனம் மறுக்கிறது. ஆனால், அதை நான் செய்யவில்லை என்றால், என்னை வேலையை விட்டு தூக்குவிடுவார்கள்.
ட்விட்டரில் ஒரு சார்பு உள்ளது. இரு கட்சிகளும் ஒரே மேடையில் இணைந்து பணியாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. நான் கொஞ்சமாவது இதுபோன்று சிந்திக்கிறேன். ஆனால், என்னுடன் வேலைபார்க்கும் பல ஊழியர்கள் முழுவதுமாக இடதுபக்கம் சாய்ந்துள்ளனர்.” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
பணிக்கு ஆபத்து
தொடர்ந்து பேசிய அவர், “உங்களுக்குத் தெரியும், எங்கள் வேலைகள் ஆபத்தில் உள்ளன. நான் ட்விட்டரில் வேலை செய்யத் தொடங்கி இடதுசாரி வேடம் அணிந்ததைப் போன்று, பலரும் ஆதங்கத்துடன் வேலை பார்த்து வருகின்றனர்.
பொதுவாக முதலாளித்துவம் வாய்ந்த நிறுனங்களில் வணிக ரீதியிலான நெருக்கடிகள் நிறைய இருக்கும். வருவாயை அதிகரிக்க நாம் போராட வேண்டும். ஆனால், ட்விட்டரைப் பொருத்தவரை அப்படி இல்லை. இங்கு வேலை பார்த்தால், மன அமைதி கெட்டுவிடும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
கோரிக்கைகள் வைத்தால், சில நாள்கள் விடுப்பில் செல்லும்படி கூறுவார்கள். இவர்களின் நெருக்கடி தாங்காமல், பல மாதங்கள் விடுப்பெடுத்த ஊழியர்கள் பல உள்ளனர். சாதாரண மனிதர்களால், ட்விட்டர் அலுவலக சூழலை தாங்கி வேலை பார்க்க முடியாது.
ஆனால், எலான் மஸ்க் மீது அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது. இந்த குறைபாடுகளை அவர் களைவார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு நடந்தால் தான் ட்விட்டர் இன்னும் பல உயரங்களை எட்டும்” என்று கூறியுள்ளார்.
மேலதிக செய்திகள்:
Narzo 50 5G: ரியல்மி நார்சோவின் முதல் 5ஜி ஸ்லிம் போன்!Samsung TV: இலவசமாக சாம்சங் ஸ்மார்ட்போனை வாங்க இதுதான் ஒரே வழி!Vivo X80: உள்ளங்கைல சினிமா கேமரா… விவோ களமிறக்கும் எக்ஸ் 80 போன்!