WhatsApp
Groups:
மெட்டா
நிறுவனம், தனது
வாட்ஸ்அப்
தளத்தில் சமீபகாலமாக பல அதிரடி மாற்றங்களை செய்துவருகிறது. புதுபுது அப்டேட்டுகள் மூலம், புதிய பதிப்புகள் வெளியிட்டுவரும் நிறுவனம், அதன்மூலம் பயனர்களுக்குத் தேவையான பல நல்ல அம்சங்களை வழங்குகிறது.
தற்போது, வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து வெளியேறும் போது, பிற பயனர்கள் அதை தெரிந்து கொள்ளக்கூடாது என்று நீங்கள் நினைத்தால், அதற்கான புதிய அப்டேட்டை நிறுவனம் சோதனைக்கு உட்படுத்தியுள்ளது. எனவே, உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
WhatsApp Update: இனி லிங்க் தகவல்களை தெளிவாகப் பார்க்கலாம்!
தேவையற்ற குழுக்களால் இனி தொல்லை இல்லை
குழுவிற்குத் தெரிவிக்காமல் அமைதியாக குழுவிலிருந்து வெளியேறும் அதிகாரத்தை நிறுவனம் விரைவில் பயனர்களுக்கு வழங்கும் என்று கூறப்படுகிறது. உடனடி செய்தி பகிரும் தளமான வாட்ஸ்அப்பின் இந்த முடிவு பயனர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்துள்ளது.
இதன்மூலம், பயனர்கள் தேவையற்ற குழுக்களில் இருந்து வெளியேறுவது எளிதாக்கப்படும். வாட்ஸ்அப் பீட்டா இன்ஃபோ பகிர்ந்துள்ள ஸ்கிரீன்ஷாட்டின் படி, பயனர்கள் குழுவிலிருந்து வெளியேறும்போது பயனர்கள் மற்றும் குழு நிர்வாகிகளுக்கு மட்டுமே தெரிவிக்கப்படும். அதாவது, யாராவது குழுவிலிருந்து வெளியேறினால்,
வாட்ஸ்அப் குழு
உறுப்பினர்கள் அதைப் பார்க்க முடியாது.
முன்னதாக, ஒரு குழுவில் இருந்து உறுப்பினர் வெளியேறும்போது, வாட்ஸ்அப் தானாக உருவாக்கிய அறிவிப்பை காட்டுகிறது. இந்தத் தகவல் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் தெரியும் வகையில் பிரகடனப்படுத்தப்படும்.
இருப்பினும், இது உண்மையில் பயனர்களுக்கு எப்போது கிடைக்கும் என்பதற்கான சரியான காலவரிசை இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த மாற்றம் கூகுள் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ஐஓஎஸ் வாட்ஸ்அப் பயனர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து வரும் அப்டேட்டுகள்
வாட்ஸ்அப், தனது குழுக்களுக்கான செயல்பாடுகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. முன்னதாக குழுவில் சேர்க்கும் நபர்களின் எண்ணிக்கை 256 ஆக இருந்தது. அதை அப்டேட் மூலம், 512 நபர்களாக உயர்த்தி நிறுவனம் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், தற்போது குழுக்களில் 2GB வரையிலான கோப்புகளை நாம் பகிர முடியும்.
மேலும், ஒரு குழுவில் உள்ள செய்திகளுக்கு வேகமாக பதிலளிக்க, எமோஜி அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்த செய்தியை அழுத்திபிடித்து கீழ் வரும் எமோஜிகளை தேர்ந்தெடுத்து பதிலளிக்க முடியும். அதுமட்டும் இல்லாமல், WhatsApp சமீபத்தில் குழு குரல் அழைப்புகளின் வரம்பை 8-இல் இருந்து 32 நபர்களாக உயர்த்தியுள்ளது.