அடுத்த தேர்தலில் டிரம்ப்-ஐ அதிபர் வேட்பாளராக முன்னிறுத்திய குடியரசு கட்சிக்கு வாக்களிக்கப்போவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்களை அனுமதிக்கும் நிறுவனங்களால், அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யப்படும் மின்சார கார்களுக்கு ஜோ பைடன் அரசு அண்மையில் வரி சலுகை அறிவித்திருந்தது. இதற்கு உலக பெரும்பணக்காரரும், டெஸ்லா கார் நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
பிரித்தாழும் சூழ்ச்சி மற்றும் வெறுப்பு அரசியலை கையாளும் ஜோ பைடனின் மக்களாட்சிக் கட்சிக்கு இனி வாக்களிக்க போவதில்லை என அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.