வாஷிங்டன்-அமெரிக்காவில், ‘மங்கி பாக்ஸ்’ நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக, நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
முதன்முறை
மங்கி பாக்ஸ் என்ற அரிய வகை நோய், உலகம் முழுதும் பரவத் துவங்கி உள்ளது. ஆப்ரிக்காவில் உள்ள வன விலங்குகளிடம் இருந்து பரவும் இந்த நோய், 1958ல், முதன்முறையாக குரங்குகளிடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், இது மங்கிபாக்ஸ் என அழைக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, பெரியம்மை போல், சருமத்தில் கொப்புளங்கள் ஏற்படும். பாதிக்கப்படுவோருக்கு, 21 நாட்களுக்கு பின், காய்ச்சல், தலைவலி, தசை வலி, முதுகுவலி, நடுக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
13 பேர்
இந்த நோய், ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. பிரிட்டனில் ஏழு பேர் மங்கி பாக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், அமெரிக்காவில், மங்கி பாக்ஸ் நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்து உள்ளது. இதற்கிடையே, கனடாவின் மான்ட்ரீல் நகரில், 13 பேர், மங்கி பாக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
Advertisement