அரியானாவில் சாலையோரம் தூங்கிய தொழிலாளர்கள் மீது லாரி மோதி விபத்து- 3 பேர் பலி

சண்டிகர்:
அரியானா மாநிலம் ஜாஜ்ஜார் மாவட்டத்தில் பாலம் கட்டுமான பணிக்காக உத்தரபிரதேசத்தில் இருந்து வந்த 18 தொழிலாளர்கள் சாலையோரம் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தூங்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது ஏறியது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 
12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.